நியூஸிலாந்தில் இன்று முதல் “வாழ்க்கையின் முடிவுச் சட்டம்“ நடைமுறையில்

#Newzealand
Prasu
4 years ago
நியூஸிலாந்தில் இன்று முதல்  “வாழ்க்கையின் முடிவுச் சட்டம்“ நடைமுறையில்

நியூஸிலாந்தில் “வாழ்க்கையின் முடிவுச் சட்டம்“(கருணைக்கொலை ) (The End of Life Choice Act) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நியூசிலாந்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த ஓராண்டுக்குப் பின்னா் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

நாட்டின் சட்டத்துறை தலைவர் டேவிட் சீமோரால் (David Seymour) இந்த சட்ட யோசனை முன்வைக்கப்பட்டது.

நியூஸிலாந்தில், வாழ்க்கையின் முடிவில் மோசமாக அவதிப்படும் மக்கள் இறுதியாக அவர்களின் கடைசி சில நாட்களில் விருப்பம், இரக்கம் மற்றும் கண்ணியத்தைப் பெறுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே இறப்பதற்கான உதவியை அணுகுவாா்கள். அத்துடன் ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே இந்த செயல்முறைக்கு தயாராக இருப்பாா்கள்.

எனினும் எல்லா சட்டங்களையும் போலவே, காலப்போக்கில் இதற்கான தேர்வு அமைந்துவிடும் என்று டேவிட் சீமோர் குறிப்பிட்டுள்ளாா். மேலும் அதிகமான மக்கள் அதை அணுகுவார்கள்.  அத்துடன், அதிகமான மருத்துவர்கள் அதை வழங்குவார்கள்" என்று வான் வெல்டன் கூறினார்.

இறப்பதற்கு உதவி கேட்க, ஒருவா் ஆறு மாதங்களுக்குள் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடிய கடுமையான நோயைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் தகவலறிந்த முடிவெடுக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

இந்த சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நோயாளிகள் உடனடியாக புதிய சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது.

நியூஸிலாந்தில் சுமார் 60 மருத்துவர்கள் மட்டுமே தற்போது இறப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!